Monday, April 9, 2012

பெண்களுக்கு செக்ஸ் மூடைக் கொடுக்க உதவும் மாத்திரை கண்டுபிடிப்பு

நியூயார்க்: பெண்களின் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு செக்ஸ மூடை அதிகரிக்க உதவும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை எதேச்சையாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டதாம். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மாத்திரையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியபோது, அந்த வேலையை செய்யாமல், பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த மாத்திரைக்கு பெண்களின் வயாகரா என்று பெயர் வந்து விட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் தோர்ப் இதுகுறித்து கூறுகையில், ஃபிலிபன்செரின் (Flibanserin) என்ற மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் மருந்தை உருவாக்கினோம்.

பெண்களிடம் இதை சோதனைக்கு உட்படுத்தினோம். ஆனால் மன அழுத்தத்தை இது கட்டுப்படுத்த்த தவறி விட்டது. மாறாக, பெண்களிடம் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விட்டது தெரிய வந்தது.

செக்ஸ் மீது மிகுந்த ஆர்வமும், படுக்கை அறைகளில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகவும், செக்ஸின்போது தங்களுக்கு வழக்கமாக இருந்து வந்த பல அழுத்தங்களை குறைக்க உதவியதாகவும் இதை சோதனைக்காக பயன்படுத்திய பெண்கள் [^] தெரிவித்தனர் என்றார் தோர்ப்.

ஆண்களுக்கான வயாகராவே கூட எதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வயாகரா இதயப் பிரச்சினைகளைகு குணப்படுத்த உருவாக்கப்பட்ட மருந்தாகும். ஆனால் அது செக்ஸ் பிரச்சினையைத் தீர்த்து வைத்ததால் தற்போது அதற்கான மருந்தாகி விட்டது.

வயாகரா செக்ஸ் உணர்வுகளை ஆண்களிடம் வேகமாக தூண்டி விடும். அதேசமயம், ஃபிலிபன்சரின் மாத்திரை அந்த அளவுக்கு வேகமானதல்லவாம். மெதுவாகத்தான் இது செக்ஸ் உணர்வுகளை பெண்களிடம் தூண்டுகிறதாம். அதேசமயம், அவர்களுக்குத் திருப்திகரமான வகையில் வேகம் இருக்கிறதாம். மேலும் வயகாரவைப் போல இந்த மாத்திரையில் பக்கவிளைவுகள் இல்லாததால் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாம்

No comments:

Post a Comment