இந்த படம் தமிழில் நடிகையின் டைரி என்ற பெயரில் வெளியாக உள்ளது.
இந்த விழாவில் இயக்குனர் அனில், நிர்வாக தயாரிப்பாளர் ஆதிராம், நடிகை சனாகான், தயாரிப்பாளர் கேயார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் முடிவில் நடிகை சனாகான் பேசுகையில், நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே தேடிப்பிடித்து நடிக்கிறேன். எதற்காகவும் யாருக்காகவும் நான் வளைந்து கொடுப்பதில்லை.
தைரியசாலியான பெண். இந்த படம் ஒரு நடிகையின் வாழ்க்கையை பற்றியது என்பதால் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தேன்.
நடிகை சில்க்கின் படங்களை பார்த்தேன்.
அவரின் உடல் அசைவுகள், நடை, உடை, பாவனைகளை கவனமாக பார்த்து அதன்படியே சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.உண்மையில் நடிகையாக இருப்பது ரொம்ப கஷ்டமான விடயம் என்றாலும் வாய்ப்புக்காக நான் எங்கும் போவதில்லை. சில நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளக்கூட தயங்குவதில்லை.
அது அந்த நடிகைளின் தனிப்பட்ட விருப்பம். சூழ்நிலைகளைப் பொறுத்து நடிகைகள் இதுபோன்ற நிலைக்கு தள்
ளப்படுகிறார்கள். ஆனால், நான் அப்படியில்ல. அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்ததில்லை. வாய்ப்புகளுக்காக நான் வளைந்து கொடுப்பதில்லை.இந்த படத்தை ஸ்மிதாவின் ஆவி பார்த்தாலும் என்னை வாழ்த்தவே செய்யும். அந்தளவுக்கு படத்தில் அவரைப்போலவே வாழ்ந்திருக்க முயற்சித்திருக்கிறேன்.
இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். நடிகையின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மிக தெளிவாக இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
எனக்கு எனினும் நடிகை சில்க்கின் இறப்பு சினிமாவுக்கு பெரும் இழப்பு என்பது மட்டும் நிச்சயம் என்றும் தொடர்ந்து இதுபோன்று சவாலான வேடங்கள் வந்தால் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை அப்படியே செய்திருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நடிகை சில்க்கின் மரணம் தொடர்பாக தெளிவான காரணம் எனக்கு தெரியவில்லை.
No comments:
Post a Comment